ஸ்ரீரங்கம் கோவில் கோபுர விமானம், நகைகள் மாயமான வழக்கு : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை அளிக்க உத்தரவு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுர விமானம், மற்றும் நகைகள் மாயமானது குறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்கள் தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
* ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகத்தின்போது சிலைகள், கதவுகள், நகைகள் மாற்றப்பட்டதாக ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
* இந்நிலையில் 52 கதவுகள், கற்கள், கோபுர விமானங்கள், ஏராளமான நகைகள் மாயமாகியுள்ளதாகவும், இதற்கு அறநிலையத்துறை இணை மற்றும் கூடுதல் ஆணையர்களே உடந்தையாக இருப்பதாக யானை ராஜேந்திரனும் வழக்கு தொடர்ந்தார். அவர் தமது மனுவில், கோவில் நகைகளை திருடிய அறநிலையத் துறையினர் அரசு ஊதியத்தில் சுகமாக இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.
* இதுகுறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story