கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் உரிய விலை கொடுத்து அகற்றம்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை உரிய விலை கொடுத்து அகற்றும் பணியில் மர வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுக்கு உரிய விலை கொடுத்து மரங்களை அகற்றும் பணியில் மர வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் கஜா புயலால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்கிறது. இந்த மரங்களை அகற்ற அதிக செலவு ஆவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மர வியாபாரிகள் மரம் ஒன்றிற்கு 100 ரூபாய் எனக்கொடுத்து, மரங்களை அகற்றி வருகின்றனர்.
Next Story