இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கூட உள்ளது.
ஆளுநர் உத்தரவின்படி, சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக சட்டமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார் என கூறப்படுகிறது.
Next Story