இலங்கையில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு : மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை தமிழக மீனவர்கள் 111 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 439 மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்த மீனவர்களுக்கும் மறுவாழ்வுக்கும் நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் மனுவுக்கு வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய -மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
Next Story