பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் - சிக்கியது எப்படி?
சென்னையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த சத்தியராஜ் என்ற சஞ்சீவ், முறையான அனுமதி இல்லாமல், சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பெண்கள் விடுதி ஒன்றை தொடங்கி இருந்தார். சஞ்சீவின் ஆன்லைன் விளம்பரத்தைக் கண்டு, பெண்கள் அங்கு வந்து தங்க தொடங்கினர். சஞ்சீவ், அவ்வப்போது விடுதிக்குள் சென்று, பார்வையிடுவார் என்றும், பல நேரங்களில் குளியலறை வரை சென்று பார்ப்பார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக செயல்படும் இந்த விடுதியில் software துறையில் பணிபுரியும் ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் தங்கியிருந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், SOFTWARE-ல் பணிபுரியும் மற்றொரு பெண், விடுதியில் சேர்ந்துள்ளார். எங்கு சென்றாலும், ரகசிய கேமராக்களை கண்டறியும் MOBILE app-யை பயன்படுத்தும் வழக்கம் கொண்ட அந்தப் பெண், யதேச்சையாக விடுதியிலும் அதை ஆன் செய்துள்ளார். அப்போது, குளியலறை ஷவர், ஸ்விட்ச் பாக்ஸ், கண்ணாடு என பல பகுதிகளில் ரகசிய கேமராக்கள் இருப்பதாக அந்த ஆப் காட்ட அந்தப் பெண் அதிர்ந்துள்ளார். இதையடுத்து, மற்ற பெண்களுடன் சேர்ந்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சஞ்சீவிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.
வாடகையை குறைக்க மறுத்ததால், பெண்கள் தன் மீது பழிபோடுவதாக சஞ்சீவ் மறுக்க, அவரை விடுதிக்கு அழைத்துச் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பல்வேறு இடங்களில் இருந்த கேமராக்களை போலீசார் வெளியே எடுத்தனர். ஆனால் கேமராவை யார் வைத்தது என தனக்கு தெரியாது என்று சஞ்சீவ் மறுத்துள்ளார். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள் மூலம் அவர், கேமராக்களை வைத்தது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சஞ்சீவ் மேல், ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story