மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது
திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்ட 5.3 அடி உயரமுள்ள தீப கொப்பரை கோயிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.
கடந்த மாதம் 23-ஆம் தேதி ஏற்றப்பட்ட மகாதீபம், தொடர்ந்து 11 நாட்கள் ஏற்றப்பட்டது. திங்கள்கிழமையுடன் தீப தரிசனம் நிறைவுபெற்ற நிலையில், மலையின் உச்சியில் கொப்பரைக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டது. இந்த கொப்பரையில் உள்ள நெய்யை பயன்படுத்தி செய்யப்படும் மை, வரும் 23ம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்னர் மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
Next Story