மரம் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.
மரம் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, மரம் ஒன்றிற்கு 5000 ரூபாய் வழங்கக் கோரி தென்னை உழவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அரசே அகற்றி, வெளி மாநிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய மண்டலம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில், 200க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்