ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்தில் தோல் மருத்துவர்கள் ஆஜர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர். ஜெயலலிதாவின் வீட்டில் வேலை பார்த்தவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அதே நேரத்தில், விசாரணை முடிந்த சாட்சிகளிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், குறுக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ தோல் நோய் மருத்துவர் முரளிதர் ராஜகோபாலன், மற்றும் தனியார் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் பார்வதி பத்மநாபன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
Next Story