20,000 லோடு மணலை விடுவிக்க வேண்டும் - தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு

பறிமுதல் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் லோடு மணலை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
20,000 லோடு மணலை விடுவிக்க வேண்டும் - தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு
x
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில், பகுதியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின்  கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,செய்தியாளர்களிடையே, பேசிய தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதன் காரணமாக தொடர் விபத்துகளும் உயிர் சேதங்களும் நடைபெற்று வருவதாக கூறினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் லோடு மணலை உடனடியாக மக்களுக்கு சென்றடைய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்