திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல தடை
வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிக நீளமான பாடிகள் கொண்ட 12 மற்றும் 16 சக்கரங்கள் பொருத்திய டாரஸ் லாரிகள், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வட்டார போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிக நீளமான பாடிகள் கொண்ட 12 மற்றும் 16 சக்கரங்கள் பொருத்திய டாரஸ் லாரிகள், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வட்டார போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. 16.2 டன் எடையுள்ள சரக்கு வாகனங்கள் மட்டுமே திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் தடையை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் கடந்த சில மாதங்களாக அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கான அரசு உத்தரவிற்காக வட்டார போக்குவரத்துதுறை பரிந்துரை செய்துள்ளது.
Next Story