சித்தர் குடிலில் பக்தர்களை தவறாக வழி நடத்துவதாக புகார் - ஆசிரமத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலைப்பாதையில் சித்தர் குடில் ஒன்று அமைத்து பக்தர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பண மோசடியில் ஈடுபடுவதாகவும் வந்த புகாரை அடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கிரிவலப்பாதையில் இடைக்காட்டு சித்தர் குடில் என்று அமைத்து பக்தர்களை தவறாக திசை திருப்புவதாக மாவட்ட சட்டபணிகள் குழுவிற்கு புகார் வந்தது. இதனையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி மற்றும் நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் இடைக்காட்டு சித்தர் குடிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகார்கள் மீதான விளக்கம் குறித்து ஆசிரம நிர்வாகி கோவிந்தராஜிடம் கேள்வி எழுப்பட்டது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல கோடி ரூபாயை அபகரித்துள்ளதாக வந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கோவிந்தராஜ், வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக நீதிபதியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாலுக்கா காவல்துறையினர் ஆசிரம நிர்வாகி கோவிந்தராஜை கைது செய்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.
Next Story