தென்னை மரங்கள் சேதம் - மறுசீரமைப்பு தொழில்நுட்பங்கள்
கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை மறுசீரமைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
* கஜா புயல் தாக்கிய பகுதிகளில் 1 முதல் 3 வயதுள்ள தென்னங்கன்றுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் சாய்வாக இருந்தால் அதனை முட்டு கொடுத்து நிலைநிறுத்தலாம்
* வடிகால் வசதி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மீட்கலாம்.
* பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ஒரு மாதத்திற்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், மூன்றரை கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ்,
* 1 கிலோ ஜிப்சம், 50 கிலோ மக்கிய உரம், 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த உரமாக இடவேண்டும்.
* பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தென்னை டானிக் 200மில்லி வீதம் 6 மாத இடைவெளியில் தொடர்ந்து 2 வருடங்களுக்கு வேர் மூலம் செலுத்த வேண்டும்
* பசுந்தாழ் உரங்களான சணப்பை, களப்பகோனியம், அகத்தி ஆகியவற்றை தென்னந்தோப்பில் பூக்கும் பருவத்தில் உழுது மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம்
* தென்னை மரங்களில் சாறு வடியும் பகுதிகளில் பூசாண தாக்குதலை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு பசை பூசலாம்.
* சாறு வடிதலை கட்டுப்படுத்த வேர் மூலம் ஹெக்ஸகோனசால் மருந்தினை தண்ணீரில் கலந்து 3 முறை 3 மாத இடைவெளியில் மரத்தில் செலுத்தலாம்
* புயல் தாக்குதலால் சேதமான தென்னை மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.
* தோப்புகளில் குப்பை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* தென்னங்கன்றுகள் வைக்கபட்ட பகுதிகளில் பயிறு வகைகள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருமானத்தை பெருக்கலாம் .
Next Story