அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கேட்டு அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேருக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
x
மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கேட்டு அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேருக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கோரி, கடந்த மாதம் 26 ம் தேதி தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த இந்த போராட்டம் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமாகவும், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசாணையை எரித்து போராட்டமாகவும் நடந்தது. இதில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்களின் விவரங்களை பெற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 17-பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

ஆசிரியர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பதில் திருப்தி அளிக்காவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை வரை எடுக்கப்படலாம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதால், ஆசிரியர்கள் பீதி அடைந்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்