மயானத்திற்கு செல்ல சாலை இல்லாத கிராமம் : இறந்தவர் உடலை வயல் வழியே எடுத்துச் செல்லும் அவலம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பன்னீர்கோட்டம் கிராமத்தில், மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் இறந்தவர் உடல் வயல் வழியே எடுத்துச் செல்லப்படுகிறது.
மயானத்திற்கு செல்ல சாலை இல்லாத கிராமம் : இறந்தவர் உடலை வயல் வழியே எடுத்துச் செல்லும் அவலம்
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பன்னீர்கோட்டம் கிராமத்தில், மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் இறந்தவர் உடல் வயல் வழியே எடுத்துச் செல்லப்படுகிறது. இக்கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சாலை வசதி செய்து தரப்படவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை மரணமடைந்த ராஜரத்தினம் என்பவரது உடலை சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல் வழியே எடுத்துச் செல்ல அவரது உறவினர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால், மயானத்திற்கு செல்ல விரைவில் சாலை வசதி செய்துத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்