துறைமுக பகுதிகளை படம் பிடித்த வெளிநாட்டு இளைஞர்கள் - வெளிநாட்டினருக்கு உதவிய 3 பேரிடம் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி துறைமுக பகுதிகளையும், மத்திய அரசு நிறுவனமான இந்திய அரிய மணல் ஆலையின் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பேர் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி துறைமுக பகுதிகளையும், மத்திய அரசு நிறுவனமான இந்திய அரிய மணல் ஆலையின் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பேர் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் தாது மணலை பிரித்தெடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய அரிய மணல் ஆலையின் உள்ளே நுழையவும் அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஆலையின் காவலாளி, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து பிரான்ஸ் நாட்டு இளைஞர்களுக்கு உதவிய பாதிரியார் கில்டஸ் உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story