ரன்வீர்ஷா இதுவரை பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை - உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் குற்றச்சாட்டு

தொழிலதிபர் ரன்வீர்ஷா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை தன் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரன்வீர்ஷா இதுவரை பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை - உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் குற்றச்சாட்டு
x
இதனிடையே சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ரன்வீர்ஷா, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தன் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்ஜாமின் கோரி இருவரும் தாக்கல் தாக்கல் செய்த மனுக்கள், உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ரன்வீர் ஷாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதையடுத்து, நேர்மையாக சிலைகளை வாங்கியிருந்தால் அவற்றை ஏன் புதைத்து வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்