32 மாவட்டங்களிலும் தேர்வு துறை அலுவலகம் திறப்பு - மாணவர்கள் நலனுக்காக கல்வித்துறை நடவடிக்கை

தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக 32 மாவட்டங்களிலும் தேர்வு துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
32 மாவட்டங்களிலும் தேர்வு துறை அலுவலகம் திறப்பு - மாணவர்கள் நலனுக்காக கல்வித்துறை நடவடிக்கை
x
தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகம், பள்ளி பொதுத் தேர்வு துவங்கி, தொழில்நுட்ப தேர்வு, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு, கல்வி உதவித் தொகைக்கான தேர்வு என ஆண்டுக்கு 40 வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளில் பங்கேற்பதற்காகவும்,  மற்ற பணிகளுக்காகவும் மாணவர்கள் சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கும், 7 மண்டல அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் வசதிக்காக 32 மாவட்டங்களிலும் உதவி இயக்குனர் தலைமையில் தேர்வுத் துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்