கஜா புயல் பாதிப்பு : மீனவர்களை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பார்வையிட்டார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலையில் கோடியக்கரை வந்து சேர்ந்த நிர்மலா சீதாராமன், பின்னர் கார் மூலம் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்திற்கு சென்றார். அங்கு, கஜா புயலில் பாதிக்கப்பட்டு,. படகுகளை இழந்த மீனவர்களுக்கு, நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். கூட்டத்தினர் மத்தியில் பேசிய நிர்மலா சீதாராமன், வீடு இழந்த மக்களுக்கு, மத்திய அரசு நிச்சயம் உதவி செய்யும் என்று உறுதி அளித்தார்.
Next Story