முப்படைகளில் பெண்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன்
நாட்டின் முப்படைகளில் இணைந்து பணியாற்ற பெண்கள் முன்வர வேண்டும் என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
நாட்டின் முப்படைகளில் இணைந்து பணியாற்ற பெண்கள் முன்வர வேண்டும் என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 95 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை இந்த சமுதாயம் கொடுத்துள்ளது என்றார். பணம் இ௫ந்தால் தான் கல்வி என்று இல்லாமல் தற்போது அனைத்து பெண்களுக்கும் கல்வி வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்..
Next Story