டிசம்பர் 8 முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்
நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் ஊட்டி - கேத்தி இடையே வாரந்தோறும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 8ஆம் தேதியில் இருந்து, சனிக்கிழமைதோறும் மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே, 'பிரீமியம் ஸ்பெஷல்' சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில், முதல் வகுப்பு கட்டணம் 1,100 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்புக்கு 800 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Next Story