நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடி இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்
நிர்மலாதேவி வழக்கை விசாரித்த சிபிசிஐடியின் இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதால் இதனை சிபிஐ.,க்கு மாற்றக் கோரி அனைத்து இந்திய மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், நிர்மலாதேவி உள்ளிட்டோர் வழக்கு குறித்த சிபிசிஐடியின் இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
Next Story