துப்புரவு தொழிலாளி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்...
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வரும் அனுசியாவின் பிறந்தநாளை போலீசார் கேட் வெட்டி கொண்டாடினர்.
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 67 வயதான அனுசியா என்பவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அனுசியாவின் பிறந்தநாளை போலீசார் கேட் வெட்டி கொண்டாடினர். வழக்கம் போல் பணிக்கு வந்த அனுசயா, போலீசாரின் இந்த நடவடிக்கையால் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
Next Story