மத்திய அரசு ஒப்புதல் : வஞ்சிக்கும் செயல் - ஸ்டாலின்
மேகதாதுவில் அணை தொடர்பான ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
* தமிழகத்தின் குடிநீர் தேவையையும், வேளாண் நடவடிக்கைகளையும் பெருமளவுக்கு பாதிக்கும் என கவலை தெரிவித்துள்ளார்.
* இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முற்றிலும் விரோதமானது சுட்டிக்காட்டி உள்ள மு.க. ஸ்டாலின், புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.
* எனவே, உடனடியாக மத்திய நீர் வள அமைச்சகம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ள மு.க. ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெற நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
Next Story