காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணை அறிக்கை கோரும் ஆணையம்
காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து இணை ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
* விடுமுறை கொடுக்காதது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய காவலர் தர்மனை பழிதீர்க்கும் விதமாக, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவரை கீழே தள்ளி தாக்கி பொய் புகார் தெரிவித்தார். இதனால் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
* இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, 4-வாரத்துக்குள் அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Next Story