காரில் நகை கொள்ளை : காட்டிக்கொடுத்த சிசிடிவி - குற்றவாளிகளை பிடிக்க சுடுகாட்டில் தங்கி இருந்த போலீசார்

சென்னையில் இரவு நேரத்தில், காரில் இருந்தவர்களை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
காரில் நகை கொள்ளை : காட்டிக்கொடுத்த சிசிடிவி - குற்றவாளிகளை பிடிக்க சுடுகாட்டில் தங்கி இருந்த போலீசார்
x
சென்னை வடக்கு கடற்கரை சாலை ரயில் நிலையம் அருகே கடந்த 18 ஆம் தேதி அதிகாலையில் சையது அலி என்பவர் நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது சையது அலி டீ குடிப்பதற்காக காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சையது அலியிடம் முகவரி கேட்பது போல் அருகே வந்து, காரில் இருந்தவர்களை கண்முடித்தனமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட கபாலி,வெங்கடேஷ் மற்றும் சுரேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுரேந்திரனை கைது செய்வதற்காக அவன் அடிக்கடி வந்து செல்லும் சுடுகாட்டில் போலீசார் 2 நாட்கள் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்