கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கருப்பசாமி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்

தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கருப்பசாமி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் அடுத்த மாதம்  4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி லியாகத் அலி உத்தரவிட்டார். இதையடுத்து, மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லும் போது ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன் கோயில் விளக்கு அருகில்  முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சென்ற வாகனம் மீது எதிரே வந்த டாடா ஏசி வாகனம் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் 15 நிமிடத்திற்கு பிறகு முருகன், கருப்பசாமியை போலீஸார் அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்