வண்டல் மண் எடுக்க எந்த விதிப்படி அனுமதியளிக்கப்படுகிறது? - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

வண்டல் மண் எடுக்க எந்த விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது? என்பது குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வண்டல் மண் எடுக்க எந்த விதிப்படி அனுமதியளிக்கப்படுகிறது? - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
x
மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண்ணை எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை மீறி செங்கற்சூளைகளுக்கு சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதாக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனுமதிக்கப்பட்ட ஒரு மீட்டர் அளவை தாண்டி சட்ட வரோதமாக லாரி லாரியாக வண்டல் மண் எடுக்கப்படுவதாகவும் இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும், விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க எந்த விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது? அனுமதி வழங்கும் அதிகாரி யார் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்