முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம் : கேரள அரசுக்கு தமிழக அரசு நோட்டீஸ்
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக கேரள அரசு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
* இந்த நோட்டீசுக்க, 30 நாட்களில் பதில் அனுப்புமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரள அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை, கேரள அரசிற்கு முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட ஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கியது.
* இதை எதிர்த்து தமிழக முதலமைச்சர், அக்டோபர் 24ஆம் தேதி
பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், புதிய அணை கட்டும் முடிவை கேரள அரசு, தமிழ்நாட்டின் மீது திணிக்க முடியாது என்றும், அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை, முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
Next Story