ஸ்டெர்லைட் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
x
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அகர்வால் தலைமையில் விசாரணை குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை கேட்கவில்லை என்று கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. அதனை உச்சநீதிமன்றம் ஏற்காததால் தமிழக அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அதையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் தலையிட மறுத்து விட்டது. 

Next Story

மேலும் செய்திகள்