பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை
சட்டம் ஒழுங்கு பணியில் உள்ள காவலர்கள் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாக வந்த புகாரையடுத்து செல்போன் பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் இருந்து வெளியான சுற்றறிக்கை ஒன்றில், தமிழகத்தில் கோயில் வளாகம், பொதுக் கூட்டங்கள் நடக்கும் இடங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பணியில் உள்ள காவலர்கள் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாக காவல்துறைக்கு புகார் வந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கீழ் உள்ளவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒவ்வொரு காவல்நிலையத்திலும் உள்ள நோட்டீஸ் போர்டில் அறிவிப்பை வெளியிடவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரி செல்போன் பயன்படுத்த அனுமதித்தால் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story