முல்லை பெரியாறு அணை வழக்கு : பிப்ரவரியில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
முல்லை பெரியாறு அணைப் பகுதியில், கேரள அரசு சார்பில் கட்டப்படவுள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, வரும் பிப்ரவரி மாதத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணைப் பகுதியில், கேரள அரசு சார்பில் கட்டப்படவுள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, வரும் பிப்ரவரி மாதத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணைப்பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவிற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க, கேரள அரசிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இந்த அனுமதியை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விசாரிக்கப்படும் என தற்போது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story