சென்னையில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்

சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இந்தாண்டும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
சென்னையில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்
x
சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இந்தாண்டும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் திரைப்பட இயக்குநர் கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க மட்டுமே  அனுமதியளிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பறை இசை, வாண வேடிக்கை மற்றும் மாட்டிறைச்சி உணவும் வழங்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய இயக்குநர் கெளதமன், தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்து அறவழியில் போராடி வருவதாகவும், தமிழினத்தை அழிக்க நினைத்தால் போராட்டம் வெடிக்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்