கஜா புயல் நிவாரணம் : தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு ஆலோசனை
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் மாலையில் நாகைக்கு வந்தனர்.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் மாலையில் நாகைக்கு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று நாகை, வேட்டைக்காரனிருப்பு, காமேஸ்வரம், புஷ்பவனம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிகின்றனர்.
Next Story