"மோகன் சி லாசரஸ் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம்" - உயர் நீதிமன்றம் உத்தரவு
கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ், இந்து கடவுள்கள் மற்றும் கோவில்களை விமர்சித்து பேசியதாக கோபிநாத் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ் இந்து கடவுள்கள் மற்றும் கோவில்களை விமர்சித்து பேசியதாக சேலம் மாவட்ட பாஜக தலைவர் கோபிநாத் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மோகன் சி லாசரஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கின் விசாரணையை காவல் துறையினர் தொடரலாம் என்றும் ஆனால் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடாது எனவும் உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளருக்கு
நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story