தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தவில்லை : கருத்தரங்கம் நடக்காமல் அரசு பார்த்து கொள்ளும்

தமிழ் பண்பாடு பெண்களை, தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை, பதிய விட கூடாது என்று, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தவில்லை : கருத்தரங்கம் நடக்காமல் அரசு பார்த்து கொள்ளும்
x
இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில், திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்துறை அடுத்த மாதம், 6 மற்றும் 7 ஆம் தேதிகளில், கருத்தரங்கு நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

இந்த கருத்தரங்கின் தலைப்பு, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கல்லூரியை, தமிழக அரசு தொடர்பு கொண்டு, அவமதிப்பை உருவாக்கும் வகையிலான அந்த கருத்தரங்கை நடத்த விடாமல் பார்த்து கொள்ளும் என தெரிவித்துள்ளார். 

பெண்களை பெருமைப்படுத்தும் எண்ணற்ற இலக்கிய படைப்புகள் தமிழில் நிறைந்து இருக்கும் போது, தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நச்சுக்கருத்தை பதிய விடக் கூடாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார். 

இதனிடையே, சர்ச்சைக்குள்ளான அந்த கருத்தரங்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்