கஜா புயல் சேதம் : மத்தியக்குழு ஆய்வு
கஜா புயல் சேதங்களை பார்வையிடும் பணியை , மத்தியக்குழு மாலையில் தொடங்கியது.
கஜா புயல் சேதங்களை பார்வையிடும் பணியை , மத்தியக்குழு மாலையில் தொடங்கியது. குளத்தூர் என்ற இடத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் இடிந்து கிடக்கும் குடிசை வீடுகளை பார்வையிட்ட அதிகாரிகள், வடகாடு என்ற இடத்தில் தென்னை மற்றும் வாழை மரங்கள் விழுந்து சேதம் அடைந்த
பகுதியை ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து, வடுகப்பட்டி, பரமன்நகர், மாங்காடு, செம்பட்டி விடுதி, ஆதனூர் கோட்டை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள மத்தியகுழு , முதல் நாளில் மட்டும் 13 இடங்களை பார்வையிட முடிவு செய்துள்ளது. கந்தர்வ கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இன்றிரவு, மக்களை சந்தித்து, மத்தியகுழு அதிகாரிகள் குறைகளை கேட்டறிகிறார்கள்.
Next Story