ராமேஸ்வரத்தில் வெள்ளத்தில் மிதக்கும் மீனவ கிராமங்கள்
ராமேஸ்வரம் தீவு பகுதியில் இடைவிடாது 6 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால், மீனவ கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் இடைவிடாது 6 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. புதுரோடு, நடராஜபுரம், ராமகிருஷ்ணாபுரம், கரையூர்,சின்னபாலம் மற்றும் பாம்பன் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சுமார் 2 அடி உயரத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக கூறும் மீனவர்கள், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்தனர். வெள்ள நீர் வடிந்து செல்ல, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story