"வேளாண், சுகாதாரம், கல்விக்கு நிதி குறைவு" - அன்புமணி
வேளாண்மை, சுகாதாரம், கல்வித் துறைகளுக்கு, தமிழக அரசு குறைந்தளவு நிதி ஒதுக்குவதாக, பா.ம.க. எம்.பி. அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார்.
வேளாண்மை, சுகாதாரம், கல்வித் துறைகளுக்கு, தமிழக அரசு குறைந்தளவு நிதி ஒதுக்குவதாக, பா.ம.க. எம்.பி. அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மூன்று துறைகளுக்குமான நிதி ஒதுக்கீட்டை கடந்த 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு குறைத்து வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நிதி மற்றும் சமூகச் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அன்புமணி, பயனற்ற இலவசம், மானியங்களை ஒழித்து, அதன் மூலம் கிடைக்கும் நிதியை, மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால், அதல பாதாளத்தில் தமிழகம் விழுவதை தவிர்க்க முடியாது என்றும் தமது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story