காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
x
தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நிர்மல்குமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன்,  சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் மொத்தம் ஆயிரத்து 274 குழந்தை காப்பகங்கள் இருப்பதாகவும், அதில் 3 காப்பகங்கள் பதிவு செய்யாமல் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல், தீவிரமான இந்த விவகாரத்தில் துடிப்புடன் செயல்பட வேண்டும்  என அறிவுறுத்தினர். குழந்தைகள் கடத்தல் பின்னணியில் ரவுடி கும்பல் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழந்தை கடத்தலை தடுக்க, காப்பகத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்