மன்னார்குடி : கொட்டும் மழையில் மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மூவாநல்லூர், வெட்டிக்காடு, எடகீழையூர், ராஜாளி குடிகாடு, உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாத அவர்கள், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
Next Story