துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் - மீனவர்கள் வேதனை
கஜா புயலினால் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்ததுள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சூறைக்காற்றின் போது படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, நங்கூரங்களை அறுத்துக்கொண்டு கடலில் மூழ்கியுள்ளது. சில படகுகள் கரையோரங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் கரையேறியது. மேலும் பல படகுகள் எங்கு சென்றது என்று புரியாமல் இன்றுவரை படகு உரிமையாளர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் படகுகளை முழுமையாக கணக்கெடுப்பு செய்யாமல், தோராயமாக படகுகளின் சேதத்தை அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என மீனவர்கள் கூறுகின்றனர். சேதமடைந்த மற்றும் மூழ்கிய படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, புதிய படகுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். படகுகளை நம்பியிருந்த தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story