சித்தர்கள் வாழ்ந்த பிரம்ம ரிஷி மலையில் தீபம் ஏற்ற தயார் நிலையில் 1,008 கிலோ நெய் பிடிக்கும் கொப்பரை

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற பெரிய தீபக் கொப்பரையுடன் ஆயிரத்து 8 மீட்டர் திரி தயாரிக்கப்பட்டு உள்ளது.
சித்தர்கள் வாழ்ந்த பிரம்ம ரிஷி மலையில் தீபம் ஏற்ற தயார் நிலையில் 1,008 கிலோ நெய் பிடிக்கும் கொப்பரை
x
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற பெரிய தீபக் கொப்பரையுடன் ஆயிரத்து 8 மீட்டர் திரி தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரம்ம ரிஷி  மலை அடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை தீப திருநாளையொட்டி நாளை பிரம்ம ரிஷி மலை உச்சியில் பிரமாண்ட தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதற்காக புதிய தீப கொப்பரை வடிவமைக்கப்பட்டு 1008 மீட்டர் நீளமுள்ள திரி தயார் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1008 கிலோ நெய் அதில் போடப்பட்டு தீபம் ஏற்றப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்