மின்வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் - கொடைக்கானல் மலைகிராம மக்கள் வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கொடைக்கானல் மலை கிராமமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
கஜா புயலின் போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்ட நிலையில், மின்வினியோகத்தை சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கொடைக்கானல் நகர் பகுதியில் மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்மலைகிராமங்களான பூண்டி, போலூர், கூக்கால், கிளாவரை, பழம்புத்தூர், புதுப்புத்தூர், குண்டுபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கும் மக்கள், இருப்பு வைக்கப்பட்டுள்ள கேரட், உருளைக்கிழங்கு, பூண்டு உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அழுகி வருவதாகவும் கூறினர். போர்க்கால அடிப்படையில் மின்வினியோகத்தை சீர்செய்ய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story