ரூ.14 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் : புயல் நிவாரண நிதியாக அளித்த குன்னம் அதிமுக எம்.எல்.ஏ
ரூ.14 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் : புயல் நிவாரண நிதியாக அளித்த குன்னம் அதிமுக எம்.எல்.ஏ
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அரிசி, பிரெட், தண்ணீர் பாட்டில்கள் உட்பட 14 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்களை, கஜா புயல் நிவாரணத்துக்காக
மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் வழங்கினார். மேலும், 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர் வழங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் நிவாரணமாக பணம் மற்றும் பொருட்கள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கிய இந்த நிவாரணப் பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story