புயல் பாதிப்பை சமாளிக்க மாடுகளை விற்ற விவசாயிகள் : மணப்பாறை வாராந்திர மாட்டுச் சந்தையில் சோகம்
புயல் பாதிப்பை சாமாளிப்பதற்காக, கால்நடைகளை விவசாயிகள் விற்ற சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
கஜா புயல் பாதிப்புக்கு பிறகு, திருச்சி மணப்பாறையில் வாரச் சந்தை கூடியுள்ளது. இந்த சந்தையில், வாரந்தோறும் 5 கோடி ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், இந்த வாரம், குறைவான மாடுகளே வந்ததால் சில லட்ச ரூபாய் அளவுக்கே மாடுகள் வியாபாரம் நடைபெற்றது. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும் வந்திருந்தனர். புயலில் அனைத்தையும் இழந்து விட்டதால் மாட்டை பராமரிக்க முடியாது என கூறி மாடுகளை விற்பனை செய்தனர். கிடைத்த விலைக்கு மாடுகளை விவசாயிகள் விற்றுச் சென்றது பலரையும் கலங்கச் செய்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை சரி செய்வதற்காக மாடுகளை விற்பனை செய்த விவசாயிகளின் நிலைமை, வேதனை தருவதாக இருந்தது.
Next Story