பள்ளி மாணவா்கள் கொண்டாடிய இயற்கை உணவுத்திருவிழா

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அழிந்து வரும் நவதானியங்களை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவா்கள் இயற்கை உணவுத்திருவிழா கொண்டாடினர்.
பள்ளி மாணவா்கள் கொண்டாடிய இயற்கை உணவுத்திருவிழா
x
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அழிந்து வரும் நவதானியங்களை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவா்கள் இயற்கை உணவுத்திருவிழா கொண்டாடினர்.

அங்குள்ள ஏழாயிரம் பண்ணை என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில், நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் 140க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பொதுமக்கள் பார்வைக்கு  வைக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த, கிராமத்து இயற்கை உணவுகளை தாங்களே தயார் செய்து, காட்சிப்படுத்தியிருந்தனர். 

சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட கேழ்வரகு களி, கூழ் மற்றும் தோசை வகைகள் குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட சாதம், அடை, அவல் வகைகள், கொண்டைக்கடலை சுண்டல் மற்றும் கூட்டு வகைகள், முளை கட்டிய பயிர்கள், சுக்கு நீா் மற்றும் பனை வெல்லத்தால் தயாரிக்கபட்ட பானகம் ஆகியவை, அனைவரையுமம் வெகுவாக கவர்ந்தது. உணவு திருவிழாவுக்கு வந்தவா்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உணவூட்டி குழந்தைகள் மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்