"நிவாரண பொருட்களுக்கு, அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை" - போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்களை கொண்டு செல்வோர், பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்களை கொண்டு செல்வோர், பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தஞ்சாவூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் கஜா புயலால் பலத்த பாதிப்படைந்துள்ளது. இப்பகுதிகளுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story