சாலை அமைப்பதற்கு வனத்துறை தடை - விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் விபத்துகளும், போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் விபத்துகளும், போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனடியாக சாலை அமைத்து தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story