மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்
மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹூலுவாடி ஜி.ரமேஷ் கடந்த 2016 ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். அவர் தற்போது தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது நீதிபதியாக உள்ளார்.
இந்நிலையில் நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷை மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக குறைந்து, காலியிடம் 14 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story