கந்த சஷ்டி விழா : இன்று சூரசம்ஹாரம்

இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கந்த சஷ்டி விழா : இன்று சூரசம்ஹாரம்
x
திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள் : 

முருகப் பெருமானின் பெருமைகளை விளக்கும் பண்டிகைகளில் ஒன்றான சஷ்டி விழா அறுபடை வீடுகளில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு இன்று திருச்செந்தூரில் நடக்க உள்ளது. இதற்காக பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடத்தில் முன்னெற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

சிங்கார வேலவர் கோயில் வேல் வாங்கும் நிகழ்ச்சி :



கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் தன் தாயிடம் வேல் வாங்கியதும் திருமேனி எங்கும் வியர்வை பொழியும் அருட்காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய சிங்காரவேலவர், தனது தாயார் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேலை வாங்கினார். வேல் வாங்கிய சிங்காரவேலவர் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக ஐதீகம். அதனை தொடர்ந்து முருகப்பெருமான் தனி சன்னதியில் அமர்ந்ததும், சிங்காரவேலரின் மேனி முழுவதும் வியர்வை துளிகள் அரும்பின. 

திருப்பரங்குன்றம் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் வேல் வாங்கும் திருவிழா



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வேல்வாங்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்த சஷ்டி விழா 8-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் முருக பெருமானின் தாயார் கோவர்த்தனம்பிகையிடம் சூரனை வதம் செய்வதற்காக சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் சக்திவேலை வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 




Next Story

மேலும் செய்திகள்